பிரதான செய்திகள்

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 17.6 அடியாக உயரம்

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டமானது 17.6 அடியாக உயர்வடைந்துள்ளது.

தொடர்ந்தும் மழை பெய்தால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் எ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான பாவற்குளத்தின் நீர் கொள்ளளவு திறன் 19.4 அடியாகும். தற்போது பெய்து வரும் மழை காரணமாக 17.6 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

தொடர்ந்தும் மழை பெய்தால் அதன் வான் கதவுகள் திறக்கப்படும். 18 அடியை அண்மித்த வருவதால் பாவற்குளத்தின் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மெனிக்பாம், மீடியாபாம், பாவற்குளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட அரச அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

ராஜபஷ்ச அரசு அறுதிப் பெரும்பான்மை பலத்தை! இழக்கும் நிலைக்கு வந்துள்ளது.

wpengine

100,000 அமெரிக்க டொலர்கள் அவரது மனைவியின் கணக்கில் வரவு

wpengine

வவுனியாவில் மோதல்! கடை சேதம்

wpengine