எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்களான சுந்தரம் அருமைநாயகம் மற்றும் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டுள்ளார்.
இதன்போது அவர் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வெள்ள அனர்த்தத்தின் பாதிப்பு தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
அத்துடன் இதுவரையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்பிலான விபரத்தை தனக்கு அனுப்புமாறு அரசாங்க அதிபர்களிடம் கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களை விரைவில் வழங்க ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கதைத்து நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை எதிர்கட்சித் தலைவரின் அலுவலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.