பிரதான செய்திகள்

மன்னாரில் சீரற்ற காலநிலை! 36குடும்பங்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற கால நிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்ந்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார்.

நேற்று இரவு வரை பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் உள்ள மீள் குடியேற்ற கிராமமான ‘பெல்வேறி’ கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தலைமன்னாரில் உள்ள பொது மண்டபம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெல்வேறி கிராமத்தைச் சேர்ந்த 38 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 நபர்களே இடம் பெயர்ந்து பொது மண்டபத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த கிராம மக்களை அக்கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலகர் உடனடியாக சென்று பார்வையிட்டதோடு, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

மேலும் கிராம அலுவலகர் ஊடாக அந்த மக்களுக்கு உணவு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இராணுவத்தினரும் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்ட மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வங்காலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களுடைய 12 படகுகளும் சேதமாகியுள்ளதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related posts

துறைமுக அதிகார சபை பணிப்பாளரின் வீட்டில் கொள்ளை – மூவர் கைது!

Editor

மன்னாரில் “இணைந்த கரங்கள்” அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Editor

தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு-2018 தேசிய பாரிசவாத நடைப்பயணம்

wpengine