பிரதான செய்திகள்

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக உதவியாளரான சமீர மக்ஹார, மங்கள சமரவீரவின் புகைப்படத்தை வணங்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

நேற்று நிதியமைச்சில் வைத்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீர, முன்னர் மங்கள சமரவீரவின் உதவியாளராக இருந்த காலத்தில் போதைவஸ்து குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் மீண்டும் மங்கள சமரவீர நிதியமைச்சரானதும் அவருடன் இணைந்துள்ள சமீர, அமைச்சரின் புகைப்படத்தை சுவரில் பொருத்தி வணங்கும்காட்சியே வைரலாகியுள்ளது.

சமீர, அமைச்சர் மங்கள சமரவீரவுடன் உத்தியோகபூர்வ விஜயங்களில் பங்கேற்றமை தொடர்பில் முன்னதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு – சிலாபம் பஸ் விபத்தில் 10 பேர் காயம்!

Editor

இரண்டாம் எலிச​பெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில்

wpengine

மாவட்ட ரீதியாக உடல்களை அடக்கம் செய்ய இடங்களை தெரிவு செய்யுங்கள்

wpengine