பிரதான செய்திகள்

புலிப் பூச்சாண்டி காட்டும் மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை பிளவுபடுத்தாது என நாடாளுமன்ற அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மஹிந்த தரப்பினர் ஆட்சி அதிகாரத்தை இழக்கும் போது புலிப் பூச்சாண்டி காட்டுவதனை வழமையாக கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி எந்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்காது. ஒரே நாடு என்ற கோட்பாட்டையே இந்த அரசாங்கம் பின்பற்றி வருகின்றது.

நீண்ட காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களுக்கு எதனையும் செய்யாத மஹிந்த தரப்பினர், திடீரென எதிர்க்கட்சிக்கு சென்றவுடன் மக்கள் மீது கரிசனை காட்டுவது வேடிக்கையாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Fight Cancer – Awareness program at BMICH

wpengine

வவுனியாவில் வீதி விபத்து ! முதியோர் படு காயம்

wpengine

கொரோனா வைரஸ் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் கூட்டம்

wpengine