Breaking
Sat. Nov 23rd, 2024

தமது கட்டுப்பாட்டிலுள்ள வேலியை அமைத்து தருமாறு கடந்த 3 மாதங்களுக்கு முன் எழுத்து மூலம் கோரிய கடிதத்திற்கு இன்று வரை வவுனியா நகரசபை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என வன இலாகா திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தொலைபேசியில் பல தடவைகள் தொடர்பு கொண்டு முறையிட்ட போதும் எவ்விதமான நடவடிக்கையும் இடம்பெறவில்லை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து அவர்கள் மேலும் கூறுகையில்,

வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள நகரசபைக்கு சொந்தமான பொதுமலசலகூடம் அமைந்துள்ள பகுதியின் அருகே வன இலாகா திணைக்களம் அமைந்துள்ளது.

நகரசபையினரின் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள இந்த திணைக்களத்திற்கு நீண்ட காலமாக வேலி அமைக்கப்படவில்லை.
இதனால் கால்நடைகள் கட்டாக்காலி மாடுகள் அதனை கடந்து வன இலாகா திணைக்களத்தின் அலுவலகத்திற்குள் சென்று அங்குள்ள பயிர்களையும், செடிகளையும் நாசம் செய்து வருகின்றன.

அத்துடன் வன இலாகா திணைக்களத்தினால் கைப்பற்றப்படும் சட்டவிரோத மரங்களையும் இனந்தெரியாதவர்கள் தூக்கிச் செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே வேலி அடைத்து தருமாறு கடந்த மூன்று மாதங்களாக எழுத்து மூலமாக கோரி வருகின்றோம்.

எனினும் இன்று வரையில் அது சீரமைத்து தரப்படவில்லை. நகரசபை தலைவரிடம் நேரடியாக இது தொடர்பில் முறையிட்டபோதும் பலன் கிடைக்கவில்லை.

இதனை சீரமைத்து எமது அலுவலகத்திலுள்ள மரம் செடிகளை பாதுகாப்பதற்கும் எமது அலுவலகத்திலுள்ள பொருட்கள் திருடப்படாமல் இருக்கவும் உடனடியாக நகரசபையினர் வேலி அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *