Breaking
Sun. Nov 24th, 2024
நெல் கொள்வனவு மற்றும் பசளை நிவாரணத்தை வழங்குவது ஆகியவற்றில் விவசாயிகளுக்காக வழங்க முடிந்த நியாயத்தை பெற்றுக்கொடுக்க தனிப்பட்ட ரீதியில் அர்ப்பணிப்புகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நெல் கொள்வனவு மற்றும் பசனை மானியம் வழங்குவது தொடர்பாக துறைசார்ந்த அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று பொலன்நறுவை மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள், அது சம்பந்தமான யோசனைகளை விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்படியான பிரச்சினைகளின் போது சகல தரப்பினருடனும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு. மக்களின் பிரச்சினைகளை ஒரு நிறுவனத்திடம் சுமத்திவிட்டு, அதில் இருந்து விலகி கொள்ள எவராலும் முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *