மன்னார் பொதுவைத்தியசாலைக்குள் புகுந்த இரண்டு கழுதைகள் அடித்துக்கொலை மனிதாபிமானமற்ற மனிதர்கள்
மன்னாரில் மட்டுமல்ல ஏனைய மாவட்டங்களிலும் சில மனிதாபிமானமற்ற மனிதர்கள் வாழத்தான் செய்கின்றார்கள் இவர்களின் செயல்பாடுகள் மிருககுணமுடையதாகவே இருக்கின்றது.
11-12-2018 இன்று காலை மன்னார் பொதுவைத்தியசாலையில் பெரிய வாசலில் இரண்டாவது அருகில் இரண்டு கழுதைகள் கொடுரமாக அடித்துக்கொன்றுவிட்டு வீதியின் அருகில் கொண்டுவந்து போட்டுள்ளார்கள் காகமும் நாய்களும் மொய்த்துள்ளது.
மன்னார் பொதுவைத்தியசாலையில் உள்புகுந்த கழுதைகளை அடித்துக்கொலை செய்யுமளவிற்கு கோபமும் மனிதப்பண்பும் அற்றவர்கள் தான் பாதுகாவலராக கடமை புரிகின்றார்களா?
கடமைநேரத்தில் கதவை திறந்து விட்டு விடுப்பு பார்த்துக்கொண்டும் தொலைபேசியில் மூழ்கி இருந்துவிட்டு பாவம் 05அறிவு ஜீவன் உள்ளே போனால் அதை கலைத்து விடலாம் அதை அடித்துக்கொலை செய்யச்சொல்லி சட்டம் உள்ளதா?
தவறுதலாக நடப்பதை மன்னிக்கலாம் இப்படி வேண்டுமென்றே செய்வதை என்ன செய்யலாம்!
மன்னார் மாவடத்தில் தினமும் வீதிகளில் குறைந்தது ஒரு கழுதையோ….. மாடோ….. ஆடு…..பூனை……இப்படி அடித்துக்கொலை செய்வதும் வாகனங்களால் அடித்துக்கொல்லுதலும் சுடுநீரினை ஊற்றுதலும் பெற்றோல் ஊற்றிக்கொழுத்துதல் போன்ற மனிதப்பண்பற்ற முறைகேடான செயற்பாடுகள் தினமும் அரங்கேறுகின்றன இதை யாரும் கண்டுகொள்வதில்லை ஏன்?
மன்னாரின் அடையாளங்களில் ஒன்றும் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் விலங்கினம் கழுதை
கழுதைக்கென தனியாக மன்னாரில் தான் முருங்கன் மற்றும் புதுக்குடியிருப்பு சரணாலயம் இரண்டு உள்ளது.
வனவிலங்கு திணைக்களம் சும்மா கிடக்கின்ற காணிகளை எல்லாம் வனவிலங்கு திணைக்களத்திற்கு உரியது என அடையாளப்படுத்தி விளம்பரப்பலகை போடுதல் மட்டும் வேலையல்ல விலங்குகளை பாதுகப்பதற்கான செயற்பாடுகளை செய்யலாம் கையகபடுத்துகின்ற காணிகளில் இப்படி அநியமாக இறந்து கொண்டு இருக்கும் உயிரினங்களை பாதுகாப்பதற்கான வழிவகையினை செய்யலாமே!
கிளிநொச்சியில் நாய்களுக்கான சரணாலயம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள் இது மனிதாபிமானம்.
மனிதர்களாகிய நாம் மட்டும் வாழ்வதற்கல்ல இந்த உலகு நம்மளோடு நிறைய உயிரினங்களும் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளது.
உயிர்களிடத்தில் அன்பாய் இருப்போம்…
உலகத்தில் மனிதப்பண்புடன் வாழ்வோம்…