பிரதான செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுத்தாக்கல்

பிரதமர் மற்றும் அமைச்சரவையின் செயற்பாடுகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவிற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதமர், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அந்தப் பதவிகளில் செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து நேற்று (03) உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த தடை உத்தரவுடன் தம்மால் இணங்க முடியாது என மஹிந்த ராஜபக்ஸ நேற்றிரவு அறிவித்திருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவை ஆட்சேபித்து மஹிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தில் ​மேன்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Related posts

கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் உயர்வு

wpengine

வவுனியா பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள முஸ்லிம்களின் கடைகளை அகற்றும் தமிழ் இனவாதிகள்

wpengine

வவுனியாவில் வீதி விபத்து ! முதியோர் படு காயம்

wpengine