நாடாளுமன்றில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடுமையாக தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிப்பித்துக் காட்டுவதாக உறுதியளித்த பசிலினால் அதனை செய்ய முடியாமையினால் படுதோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மஹிந்த கடும் கோபம் அடைந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் நேற்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்து தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருமாறும், பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பிரதமர் பதவியில் இருந்து விலக முடியாதென கூறிய மஹிந்த ராஜபக்ச அந்த உறுப்பினர்களுக்கு முன்னால் பசில் ராஜபக்சவுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பெரும்பான்மை பெற்றுவிடலாம் என கூறியமையினால் கடந்த மாதம் மஹிந்த, பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். எனினும் தற்போது வரை பெரும்பான்மை பெற்றுக்கொள்ள முடியாமையினால் மஹிந்த சற்று பதற்றத்துடன் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த பதற்ற நிலைமைக்கு மத்தியில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இராஜினாமா செய்யுமாறு கூறியுள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த மஹிந்த, பசிலுக்கு தொலைபேசி மூலம் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உங்களால் தான் இந்த நிலைமைக்கு வந்துவிட்டேன் என கடும் கோபமாக திட்டியமையினால் பசில் அழைப்பை துண்டித்துள்ளதாக தெரியவருகிறது.