ஜெயலலிதா இப்படிதான் நடப்பார் என்று நடித்து காட்டிய விஜயகாந்த், இவரை நம்பி நாம் ஓட்டு போட வேண்டுமா? என தேர்தல் பிரசார கூட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ”கொள்ளையடிப்பதில் அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இத்தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல்” என்றார்.
மேலும், மேடைகளில் ஜெயலலிதா இப்படி தான் நடப்பார், பேசுவார் என்று விஜயகாந்த் நடித்துக்காட்டினார். அதன்பின் மீண்டும் தனது பேச்சை தொடங்கிய விஜயகாந்த், ”ஜெயலலிதா இப்படி தான் 2 ஸ்டேப் தான் நடப்பார் உடனே கையை காட்டிவிட்டு போய் உட்கார்ந்துவிடுவார். நின்னாதானே முடியும். இவர்களை நம்பி நாம் ஓட்டு போட வேண்டுமா? ஆனால், உங்களுக்காக நான். மக்களுக்காக நான் என்று சொல்வார். ஏன்னா, அது எல்லா சொத்தையும் கொள்ளை அடிச்சுட்டுபோறதுக்கு தான்.