Breaking
Mon. Nov 25th, 2024

(சாமில் அஹமட்)

தேசம் போற்றுகின்ற என்அன்பின் தேசியத் தலைவா! இன்றைய கால கட்டத்திலே உங்களுடைய அரசியல் வளர்ச்சி என்பது உச்சத்தைத் தொடுமளவு வியாபித்துள்ளது.

இன, மத, பிரதேச வேறுபாடுகள் இன்றி சேவைகளைச் செய்து வருகின்ற தலைமையாகவும், சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக இடம்பெறும் அனியாயங்கள், அட்டூழியங்கள், அடக்குமுறைகள் என்பவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் தலைமையாகவும், நான் உங்களைப் பார்க்கின்றேன். அன்று நீங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற எமது கட்சியை ஆரம்பித்து அரசியல் என்ற நீண்ட பாதையில் காலடியெடுத்து பயணித்ததிலிருந்து இன்று வரைக்கும் பல சவால்களும், சதித்திட்டங்களும், எதிர்ப்புகளும், விமர்சனங்களும், துரோகங்களும், காட்டிக்கொடுப்புகளும் உங்களுக்கு எதிராக இடம்பெற்றது. அத்தனையும் முறியடித்து எம் சமூகத்துக்காக வேண்டி பயணித்துக்கொண்டிருக்கின்றீர் என்பதை நினைக்கும் போது நானும் உங்கள் அடிமட்டத்தொண்டன் என்பதிலிருந்து பெருமிதம் அடைகின்றேன்.

ஒரு தலைமைத்துவம் எவ்வாறு இருக்க வேண்டும் மக்களை எவ்வாறு வழிநடத்தவேண்டும், அவர்களுடைய பிரச்சினைகள், தேவைகள் என்ன? என்பதைப் பற்றி ஒரு உண்மையான தலைவனுக்கே தெரியும். அவ்வகையில் இதற்க்கான உதாரணம் நீங்களே! உங்களது சேவைகளைப் பார்த்து எதிர்கட்சிக்காரர்கள் கூட திகைத்து பெறாமைப்படுகின்றவர்களும் அரசியல்வாதி என்ற பெயரில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். உங்களது அயராத உழைப்பும், முயற்சியும் சமூகத்துக்கானதே என்பதை நான் உணர்வேன். ஆனாலும் உங்களை சில வங்குரோத்துவாதிகள் விமர்சிக்கின்றார்கள்.குறிப்பாக சமூகவலைத்தளங்களிலே அதிகமான விமர்சனங்கள் இட்டுக்கட்டப்படுகின்றது. இவ்விமர்சனத்தையெல்லாம் நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை காய்க்கின்ற மரம் தான் கல்லடி படும் என்று சொல்வார்கள். அதனைப் போன்று தான் நீங்கள் சேவை செய்கின்றீர்கள் வளர்ந்து வருகின்றீர் இதனைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்களே இவ்வாறு செய்கின்றார்கள்.

தலைவா! முக்கியமான விடயத்தை தொட்டுச்செல்கின்றேன்: குறிப்பாக இலங்கைத்திருநாட்டிலே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் யார் என்று தெரியாதவர்கள் கிடையாது. காரணம் உங்களது சேவைகள் அந்தளவுக்கு பரந்துபட்டுக் காணப்படுகின்றது. ஆனாலும் இச்சேவைகள் சரியான முறையில் மக்களுக்குப் போய்சேறுகின்றதா? என்பது தான் கேள்விக்குறியாகவும், விடைதெரியாத வினாவாகவும் உள்ளது. குறிப்பாக நீங்கள் பாடசாலைகள், பள்ளிவாயல்கள்,பஸ்தரிப்பு நிலையங்கள், பொதுக்கட்டிடங்கள் பிரதேச வைத்தியசாலைகள், பாதைகள், மைதானங்கள், சந்தைத்தொகுதிகள், தொழிற்சாலைகள்… போன்ற பலவற்றை உங்களது அயராத முயற்சியினால் அமைத்துள்ளீர்கள். இதனால் மக்கள் அனைவரும் பயனடைந்து வருகின்றார்கள்.

அத்தோடு வீட்டுத்திட்டங்கள், காணி,தொழில்வாய்ப்புக்கள், வாழ்வாதார உதவித்திட்டங்கள் சமூக நலத்திட்டங்கள் வருகின்ற போது களத்தில் நின்று பகிர்ந்தளிக்கும் எம்மவர்கள் சுயநலமாக செயற்படுகின்றார்கள். அதாவது தங்களது குடும்பங்களுக்கும், தங்களது நண்பர்களுக்கும் வழங்குவதோடு ஏனையவர்களுக்கு பாகுபாடுகள் காட்டி வழங்குகின்றார்கள் ஆனால் மற்றவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டே வருகின்றார்கள். எமது கட்சி என்பது மக்களுக்காக உருவாக்கப்பட்டது. எனவே நாம் எல்லாேரையும் ஒருகண்கொண்டு பார்த்து சேவைசெய்ய வேண்டும்.எந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும் அல்லது பொதுவானவராக இருந்தாலும் நாமும் அவர்களை அரவனைத்து செல்கின்ற போது தான் எம்மையும், எமது கட்சியை நோக்கியும் வரக்கூடிய மனப்பாண்மை அவர்களுக்கு ஏற்படும். என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே இவ்விடயத்தில் நீங்கள் கண்னும் கருத்துமாக செயற்பட வேண்டும். இதனைக்கண்கானிப்பதற்க்காக ஒரு குழுவை அமைத்து செயற்படும் போது உங்கள் மூலம் வரும் சேவைகள் அனைவருக்கும் போய்ச்சேறும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயமாக நீங்கள் சேவை செய்கின்றீர்கள் இது யாவரும் அறிந்த விடயமே ஆனால் சிலரின் சுயநலத்தாலே உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை என்பதே யதார்த்தம். இதனால் உங்களுக்கும் உண்மையான போராளிகளுக்கும் அவப்பெயர்கள் ஏற்படுகின்றன. ஏன் நான் இதனைக்கூறுகின்றேன் என்றால் உங்களையும் கட்சியையும் நேசிப்பதாலும் உங்களை மற்றவர்கள் தவறாக பேசிவிடக்கூடாது என்பதற்க்காகவும், உங்கள் மீது அன்புகொண்ட அடிமட்டத்தொண்டனாக இருப்பதாலும் நான் இதனைக் கூறுகின்றேன்.

மரணித்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம் அஸ்ரபைப் போன்றே உங்களையும் (றிஸாட் பதியுதீன்) மக்கள் பார்க்கின்றார்கள். எனவே ஒவ்வொருவரும் பொருப்புதாரிகளே ஒவ்வொருவரின் பொருப்பைப் பற்றியும் நாளை மருமை நாளில் அல்லாஹ் விசாரிக்கவுள்ளான். உங்களுடைய சேவைகளை அல்லாஹ் பொருந்திக்கொள்ளவேண்டும். அதற்கான பலனை மருமை அல்லாஹ் தந்தருள வேண்டும். தலைவா! இன்று உங்களுக்காக அனைவரும் இறைவனிடம் இருகரம் ஏந்திப் பிராத்தனை செய்கின்றார்கள். இன்னும் கட்சியும் நீங்களும் வளர வேண்டும். என்பது எனது மட்டுமல்ல அனைவரது அவாவாகவும் உள்ளது. நீங்கள் இன்று போல் என்றும் சந்தோசமாகவும், தேகாரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழ வல்ல இறைவனைப் பிராத்தித்தவனாக இம்மடலை நிறைவு செய்கின்றேன்.

என்றும் உங்களை நேசிக்கும் உங்கள் அடிமட்டத்தொண்டன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *