பிரதான செய்திகள்

வைத்தியசாலைக் குழு அங்கத்தவராக மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம்

(பாறுக் ஷிஹான்)
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக் குழு அங்கத்தவராக யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வை.எம்.எம்.ஏயின் வேண்டுகோளிற்கு இணங்க சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை யாழ்ப்பாணம் அகில இலங்கை  வை.எம்.எம்.ஏயின் அலுவலகத்தில் வைத்து  நேற்றிரவு(25) அதன் தேசிய தலைவர் எம்.எஸ் றஹீமினால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் குறித்த பேரவையின் உதவி செயலாளரான என்.பவாஸ் என்பவரும் இக்குழு அங்கத்தவராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்களப்பு- மயிலந்தனை கிராம மக்கள் குடி நீர் இன்றி மக்கள் அவதி கவனம் செலுத்தாத அரசியல்வாதிகள்

wpengine

முல்லைத்தீவில் முதல் முறையாக இலங்கை தேசிய புதியவர்கள் பிரிவினருக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டி!

Maash

திகன சம்பவம் தொடர்பில் நீதி நிலை நாட்டப்பட்டன ஹக்கீம்

wpengine