கைத்தொழில் மற்றும் வணிக துறை அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற
தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக
இல்ஹாம் மரைக்கார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரை கைத்தொழில் மற்றும் வணிக துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பரிந்துரையிலேயே
நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய கைத்தொழில் அபிவிருத்தி சபையானது இலங்கையிலுள்ள பல தனியார் மற்றும் அரச துறையினரை தொழில் முயற்ச்சிகளுக்கும் அபிவிருத்திகளுக்கும் பொறுப்பான அமைப்பாகும்.
இதில் சுய தொழில் ஊக்குவிப்புகள், தனியார் துறைகளை ஊக்குவித்தல், ஆலோசனை வழங்குதல்,
ஊர் மட்டங்களில் தொழில் சங்கங்களை உருவாக்குதல், வேலையற்ற பட்டதாரிகளுக்கு சுய தொழில் வழிகாட்டல்களையும் ஊக்குவிப்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்தல், தொழில் வளங்களை சரியாக நிர்வாகம் செய்ய வழிகாட்டுதல், தேசிய, பிரதேச வியாபார சந்தைகளை ஏற்படுத்தி கொடுத்தல்,பெண்களுக்கான தொழில் முயற்சிகளையும், பயிற்சிகளையும் வழங்குதல் போன்ற பல வகைகளின் இந்நாட்டு மக்களுக்கு சேவைகளை வழங்குகின்ற நிறுவனமாகும்.
திரு இல்ஹாம் மரைக்கார் அவர்கள் புத்தளம் மற்றும் கொழும்பு சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவரும்,
கரைத்தீவு பாடசாலையின் முன்னர் அதிபர் திரு செய்னுதீன் மரைக்கார் அவர்களின் புதல்வரும் ஆவார்.
கொழும்பு அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரும், CBS, ACF சமூக அமைப்புக்களின் தலைவரும்,
மனித உரிமைகள் அமைப்பின் கல்விக்கான இணைப்பாளரும், இலங்கையின் பிரபல உளவியல் ஆலோசகருமாவார் .
திரு இல்ஹாம் மரைக்கார் அவர்கள் உளவியல் துறையில் பட்டப்படிப்பையும், பட்ட மேற்படிப்பையும் நிறைவு செய்துவிட்டு, தற்போது இத்துறையில் கலாநிதி கல்வியை தொடர்கின்றார்.
இலங்கையின் பல மாவட்டங்களில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள், குழந்தை உளவியல் கருத்தரங்குகள், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் கருத்தரங்குகள், மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்வுகள் போன்ற 100 க்கு மேற்பட்ட பல நிகழ்வுகளையும் நடாத்தியுள்ளார்.
இவருக்கு 2018 ம் ஆண்டிக்கான இந்திய குடியரசின் அப்துல்கலாம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.