Breaking
Mon. Nov 25th, 2024

88 ஆவது சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் முதல் நாளில் பதக்கங்களை வென்று யாழ். மகாஜனா கல்லூரி வீர, வீராங்கனைகள் வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்தனர்.

18 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் முதல் மூன்று இடங்களையும் மகாஜனா கல்லூரி வீரர்கள் கைப்பற்றினர்.

88 ஆவது சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமாகின.
இன்று காலை நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் சுரேஷ்குமார் சுகிஹேரதன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

போட்டியில் அவர் 4 மீட்டர் உயரத்திற்குத் தாவி ஆற்றலை வௌிப்படுத்தியிருந்தார்.
அதே அளவு உயரத்திற்குத் தாவி ஆற்றலை வெளிப்படுத்திய மகாஜனா கல்லூரியின் மற்றொரு வீரரான சிவசாந்தன் ஜேம்ஸன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

3.60 மீட்டர் உயரத்திற்குத் தாவிய ஆசிர்வாதம் ஜினோஜனுக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது.
மகளிருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் மகாஜனா கல்லூரியின் சி.ஹெரீனா வெள்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டார்.

இதேவேளை, 16 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான குண்டெறிதல் போட்டியில் 14.55 மீட்டர் ஆற்றலை வெளிப்படுத்திய ஹார்ட்லி கல்லூரியின் எஸ்.மிதுன்ராஜ் வெண்கலப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *