பிரதான செய்திகள்

ஞானசார தேரர் மீண்டும் மேன்முறையீடு

தனக்கு எதிரான தண்டனையை இரத்துச் செய்யுமாறு கோரி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் மேன்முறையீடு செய்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பில் ஞானசார தேரருக்கு பத்தொன்பது வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அதனை ஆறு வருடங்களில் அனுபவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு எதிரான தண்டனையை இரத்துச் செய்யுமாறு கோரி அவர் கடந்த மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

எனினும் அவரது மனு கடந்த 31ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது அவர் உச்சநீதிமன்றத்தில் தனக்கு எதிரான தண்டனையை இரத்துச் செய்யுமாறு கோரி மீண்டும் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது தொடர்பான ஆரம்ப பரிசீலனை எதிர்வரும் 28ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கிடையே தற்போது வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறைக் கைதியாக அன்றி முக்கிய பிரமுகர் அந்தஸ்தில் பராமரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அவரது காவி உடை களையப்படாமல் தொடர்ந்தும் அதே உடையில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூத்த உறுப்பினர் அலிகான் சரீபுக்காக எனது பதவியினை ராஜினாமா செய்கின்றேன் றிப்ஹான்

wpengine

வவுனியாவில் சட்டவிரோதமான கடை! நகர சபை கவனம் செலுத்துமா

wpengine

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி அம்பாறையில் போராட்டம்!

Editor