குறித்த இவ்விரு குளங்களும் தூர்வையற்று காணப்படுவதாக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பில் ஆராயும் முகமாக இன்று(16) மாலை அப்பகுதிக்கு சென்ற யாழ் மாநகர சபையின் பதில் முதல்வர் துரைராசா ஈசன் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாமுடன் இணைந்து பார்வையிட்டுள்ளார்.
அத்துடன் பதில் முதல்வர் இவ்விரு குளங்களையும் துப்பரவு செய்து மக்கள் பாவனைக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதுதவிர மாநகர சபை எல்லைக்குட்பட்ட 30க்கும் அதிகமான கால்வாய்கள் துப்பரவு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக நீரேந்து பகுதிகளை கவனிக்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக அப்பகுதி மக்கள் குளிப்பதற்கு முக்கியமாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளதுடன் இந்த குளங்களை மீளவும் துப்பரவு செய்து சீராக்கி தருமாறு தகுதி வாய்ந்த அதிகாரிகளை கேட்டிருந்தனர்.