Breaking
Mon. Nov 25th, 2024

புல்மோட்டை முஸ்லிம்களின் காணிகளில் இடம்பெற்றுவரும் பௌத்த மதகுருவின் அத்துமீறல் மற்றும் பிரதேச மக்களின் நீண்ட கால காணி பிரச்சினை தொடர்பாக தீர்வுகளை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை அனைத்துப்பள்ளிகள் ஒன்றியத்தினால் நேற்று குறித்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பௌத்த மதகுருவால் புல்மோட்டையின் அனைத்து பகுதிகளிலும் காணிகளை அத்துமீறி பிடிப்பது தொடர்பாகவும் பிரதேச மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் பெற்று தரக்கோரியும், அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள காணிகளுக்குள் சென்று தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வன பரிபாலன சபையினர் அனுமதிக்காமை, அரிசிமலை காணிகள் அளவீடு தொடர்பாக எதிர்வரும் 17ம் திகதி நில அளவையாளர்கள் விஜயம் மேற்கொள்வது தொடர்பாகவும், அவற்றை தடுத்து தமது காணிகளை பெற்றுத்தரும்படி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை இன்று மேற்கொள்ள இருந்தது.

இந்தநிலையில், புல்மோட்டை இலாஹியா ஜும்மா பள்ளிவாசலில் கட்சி பேதமின்றி அனைத்து பள்ளிகள் ஒன்றியத்தின் தலைமையில் கூட்டமொன்று நேற்று இடம்பெற்றது.

புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உயர் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று இலாஹியா ஜும்மா பள்ளிவாசலில் அனைத்து கட்சி பிரமுகர்கள், பிரதேச பள்ளிவாசலைகளின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அரிசிமலை விகாரையை அண்டிய தொல்பொருள் பகுதியான 4.5 ஏக்கர் பகுதி மாத்திரம் அளவிடப்படும் என்பதுடன் ஏனைய குடியிருப்புகள் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தாம் பொறுப்பு நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நிலஅளவையின் போது குச்சவெளி பிரதேச செயலாளர், புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, புல்மோட்டை பிரதேச மக்கள் சார்பாக இரண்டு முக்கியஸ்தர்கள் நியமிக்கப்பட்டு, எதிப்பு நடவடிக்கை கை விட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *