Breaking
Mon. Nov 25th, 2024

மடுத் திருத்தல பகுதியை புனித பிரதேசமாக பிரகடப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மடு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றுள்ளது.

மடுத் திருத்தல பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்த நிலையில் ஆரம்ப கட்ட கூட்டம் கடந்த மாதம் 31ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியான பல விபரங்களை உள்ளடக்கிய கூட்டம் மடு பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் 20 இற்கும் மேற்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், மன்னார் மாவட்ட செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர் உட்பட பல திணைக்களக்களைத் சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கு பதிலா மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அவர்களும், மடு பரிபாலகரும் கலந்து கொண்டு மடு திருத்தலத்தில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *