பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கிட்டில் ரசூல் புதுவெளியில் ஆசிரியர் விடுதி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மீள்குடியேற்ற செயலணி ஊடாக நானாட்டான் ரசூல் புதுவெளி பாடசாலை ஆசிரியர் விடுதி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும்  நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக  முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளருமான தேசமானிய றிப்ஹான் பதியுதீன் கலந்துகொண்டார்.

பாடசாலை அதிபர் கருத்து தெரிவிக்கையில்” உண்மையில் எமது கிராமத்தை பொறுத்த வரையில் இங்கு நடைபெறும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் அனைத்து சேவைகளும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் மூலமாகவே செய்யப்படுகின்றது. அந்த வகையில் ரசூல் புதுவெளி பாடசாலையினை அனைவரும் தலை நிமிர்ந்த்து பார்க்கக்கூடிய வகையில் இரண்டு மாடி கட்டடத்தினை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் வழங்கியிருந்தார்.

அதன் பின்னரான காலத்தில் புதிய அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று பலர் எமது பாடசாலைகளுக்கு வருகை தந்து எங்கள் குறைகளை கேட்டு அதை தாங்கள் செய்து தருவதாக வாக்குறுதி வழங்கிவிட்டு செல்வார்கள் இதுவரை வந்து சென்றவர்கள் எந்த ஒரு உதவியினையும் இந்த பாடசாலைக்கு செய்யவில்லை ஆனால் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களிடம் நாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்றைய தினம் 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு கட்டடத்தினை எமக்கு தந்திருக்கின்றார் எனவே இந்த சேவைகளை செய்த அமைச்சருக்கும் றிப்கான் பதியுதீன் அவர்களுக்கும் எமது பாடசாலை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related posts

வவுனியாவில் மோதல்! முரண்பாட்டுக்கு தீர்வு

wpengine

“தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை”

wpengine

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் முற்றாக நிறுத்தம்!-அரசாங்க அச்சகம்-

Editor