பிரதான செய்திகள்

சபாநாயகரிடம் கோரிக்கை! மஹிந்த அணி

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளதால், நாடாளுமன்றத்தில் சுயாதீன குழுவாக தம்மை ஏற்றுக்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்த நிலையில், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்துள்ளனர்.

இதன் காரணமாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு பிரிவாக கருதாமல், தனியான சுயாதீன குழுவாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்க அந்த அணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மனைவியை கொலைசெய்து பொலிஸில் சரணடைந்த கணவன்.!

Maash

மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் பிணையில்.

Maash

மே மாதம் சம்பளம் பெறாத 7500 அரச ஊழியர்

wpengine