சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர உணவகத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் அன் க்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பிற்கு வந்த வடகொரிய அதிபர் வழமைப் போல அதிக பாதுகாப்புடன் சிங்கப்பூர் வந்திருந்தார்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் , கிம்மின் பாதுகாப்பு வீரர்கள் இவருக்காக தனியாக கழிவறையொன்றையும் எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த தினத்தில் தென்கொரியா சென்றிருந்த கிம் அதிக பாதுகாப்புடன் சென்றிருந்தார்.
அதேபோல் , ட்ரம்புடனான இந்த சந்திப்பில் தான் கொல்லப்படலாம் என கிம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வடகொரிய தலைவர் கிம் ஜோங் அன் உடனான சந்திப்பு சிறந்த ஒன்றாக அமைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் அன் ஆகியோருக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் இடம்பெற்றது.
பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தன.
இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.
இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
சந்திப்புக்கு பிறகு கருத்து தெரிவித்த டிரம்ப், கிம் ஜோங் அன் – உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக கூறினார்.
அத்துடன், அவருடன் இணைந்து மிகப்பெரிய பிரச்சினை, குழப்பங்களுக்கு தீர்வு காண முடியும் என்றும், அணு விவகாரத்தை பொறுத்தவரை இணைந்து பணியாற்றி, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட உள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த சந்திப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் மற்றும் யூகங்களை கடந்து வந்துள்ளதாகவும் இந்த சந்திப்பானது அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் அன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், உலகம் விரைவில் மிகப்பெரிய மாற்றத்தை காணவுள்ளதாகவும் வடகொரிய தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான இந்த சிறப்பு மிக்க சந்திப்பை பல்லாயிரக்கணக்கான சிங்கப்பூர் மக்களும் சுற்றுலா வந்திருந்தவர்களும் நேரடியாக கண்டு களித்தனர்.
அத்துடன், மில்லியன் கணக்கான மக்கள் இதனை தொலைக்காட்சியில் நேரடியாக கண்டுகளித்தாகவும், குறிப்பாக தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இதன்பொருட்டு அகன்ற திரைகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.