Breaking
Sun. Nov 24th, 2024

எவ்வித முன்னறிவித்தலும் வவுனியா நீதிமன்றத்திற்கு அருகில் காணப்படும் சந்தை சுற்றுவட்ட வீதிக்குச் செல்லும் வீதியை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி இவ்வீதி திறந்தவிடப்பட்டுள்ளது.

இச் செயற்பாடானது நகரசபை தவிசாளரின் அடாவடித்தனத்தையே எடுத்துக்கட்டி நிற்கின்றது என வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமாக மு. சிற்றம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வவுனியா நீதிமன்றத்திற்கு அருகில் காணப்படும் சந்தை சுற்றுவட்ட வீதிக்குச் செல்லும் வீதியை கடந்த சனிக்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளது தொடர்பாக நகரசபைத்தவிசாளர் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடவில்லை.

இவ்வீதியின் ஒரு பகுதியை நகரசபையினர் உடன்பாடு அடிப்படையில் நீதிமன்றத்தின் வாகனத்தரிப்பிடத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை வாகனத்தரிப்பிடத்திற்கு என ஒதுக்கப்பட்டு மேல் நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி, நகரசபைச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி இவ்வீதி திறந்தவிடப்பட்டுள்ளது. இச் செயற்பாடானது நகரசபை தவிசாளரின் அடாவடித்தனத்தையே எடுத்துக்கட்டி நிற்கின்றது. பின்கதவால் வந்தவர்கள் பின் கதவால் செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

கடந்த 1992ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது கைவிடப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் வெடித்தும் வெடிக்காத நிலையிலிருந்த வெடிபொருட்கள் இவற்றை எல்லாம் அவ்விடத்தில் போட்டு அப்பகுதியை அடைத்து வைக்கப்பட்டிருந்தது அந்த நாள் முதல் அடைத்தே வைக்கப்பட்டிருந்தது.

அங்கு காணப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் அனைத்தும் கேள்வி கோரல் மூலம் வழங்கப்பட்டு அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டபோது சட்டத்தரணிகளுக்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு நீதிமன்றத்திற்குள் இடப்பற்றாக்குறை நிலவிய காரணத்தினால் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் நகரசபைச் செயலாளரூடாக நடவடிக்கை எடுத்தார்.

அனைத்துப் பொருட்களும் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டு அவ்விடத்திதைச் சுத்தப்படுத்தி நாங்கள் மண் வழங்கி நகரசபை ஊழியர்களின் பங்களிப்புடன் அப்பகுதி சட்டத்தரணிகளின் வாகனத்தரிப்பிடத்திற்கு என ஒதுக்கப்பட்டது.

இதனை திறந்து வைக்கும் நிகழ்வில் வவுனியா முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி, சட்டத்தரணிகள், நகரசபைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வீதி திறப்பு தொடர்பாக எங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. விடுமுறை தினத்தில் அங்கு சென்ற நகரசபைத்தவிசாளரினால் அவ்வீதி திறந்துவிடப்பட்டுள்ளது.

இது பாதைக்குரிய இடம். அதனைத்திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று எங்களிடம் தெரிவித்திருக்கலாம். அவ்வாறு தெரிவிக்கமால் நடந்துகொண்டதை அடாவடித்தனமாகவே பார்க்கப்படுகின்றது.

நகரசபைத் தலைவர் என்றால் எல்லாம் செய்ய முடியுமா? ஒரு தீர்மானம் இல்லாமல் எதனையும் செய்ய முடியாது. இது ஒரு மத்திய அமைச்சரின் வேண்டுகோளின் அடிப்படையியே அனைத்தும் இடம்பெறுகின்றது. நிரந்தர எதிரிகளைத் தேடுகின்றார்.

இவருக்கு எதிராக தீவிரமான பிரச்சாரத்தில் நாங்கள் இறங்கவேண்டும். இதை ஒளிவு மறைவின்றியே வெளிப்படையாகவே சொல்கின்றேன்.

இவ்வீதி திறப்பு தொடர்பாக எங்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருக்க வேண்டும் நாங்களும் சட்டத்தரணிகள் நீங்களும் நகரசைபைத்தலைவர் நாங்கள் உங்களுக்குத் தெரியாதவர்கள் அல்ல இதை ஒரு விடுமுறைதினத்தில் திருடர்கள் போல வந்து திறந்துவிட்டுச் செல்வது பெரிய காரியமா?
மூன்று வாரங்களுக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அங்கு ஒரு கடிதமும் வரவில்லை கடிதம் அனுப்பவும் இல்லை பின் கதாவால் வந்தவர் பின் கதவால்தான் போகவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *