பிரதான செய்திகள்

திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

(ஊடகப்பிரிவு)
திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

திருமலை மாவட்டத்தில் கட்சியை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகவும், எதிர்காலத்தில் கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் மற்றும் வட்டாரங்களின் அபிவிருத்தி தேவைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி, செயலாளர் சுபைர்தீன், மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

Related posts

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்! அரசு அடக்கம்

wpengine

ராஜபக்ஷர்களை திருப்திப்படுத்தும் வண்ணம் அரசியலமைப்பை திருத்த அரசாங்கம் சதி

wpengine

வவுனியாவுக்கு வருகை தந்த சிங்க லே அமைப்பு

wpengine