பிரதான செய்திகள்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அசமந்த போக்கு

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் தொலைபேசி உள் இணைப்புக்கள் இரண்டு வார காலமாக செயலிழந்த நிலையில் காணப்படுகின்றமையால் வைத்தியர்கள் வைத்திய உத்தியோகத்தர்கள் நோயாளர்கள் பல்வேறு அசௌரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் உள்நோயாளர் விடுதிகள், வெளிநோயார் பிரிவு, இரத்தவங்கி மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு சத்திரசிகிச்சைப் பிரிவு, உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு ஏற்றவகையில் பொருத்தப்பட்டிருந்த தொலைபேசி உள் இணைப்புக்கள் அண்மையில் ஏற்பட்ட மழையுடனான காலநிலையால் முற்றாக செயலிழந்துள்ளது.

இரண்டு வார காலமாக செயலிழந்த நிலையில் காணப்படும் இந்த இணைப்புக்களை சீர் செய்வதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் மேற்படி பிரிவுகளில் அவசர சிகிச்சை மற்றும் அவசர தகவல் பரிமாறிக்கொள்வதற்கும் தேவைகளை நிறைவு செய்வதற்கும் மருத்துவர்கள் உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் அதேநேரம் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் சிகிக்சைகளை பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற அதிகளவான மக்களின் மருத்துவத்தேவைகளை நிறைவு செய்கின்ற இந்த வைத்தியசாலையில் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் ஏனைய தேவைகளைப்பூர்த்தி செய்வதிலும் மத்திய மற்றும் மாகாண அரசுகள் அசமந்தப் போக்கை காட்டி வருவதாக பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts

பீ.பீ.பொற்கேணி கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு (படங்கள்)

wpengine

கணவர் தினமும் குளிக்காததால் மனைவி பொலீஸ் நிலையத்தில் புகார்

wpengine

கவிஞர் ஏ.இக்பாலின் மறைவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

wpengine