பிரதான செய்திகள்

சீ.வி.விக்னேஸ்வரனால் திறக்கப்பட்ட விடுதியின் அவல நிலை! மக்கள் விசனம்

கிளிநொச்சி – வன்னேரி குளத்தில் கடந்த ஆண்டு வட மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட சுற்றுலா மையம் பயன்பாடற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி 6 மில்லியன் ரூபா செலவில் குறித்த சுற்றுலா மையம் அமைக்கப்பட்டிருந்தது.

இது கடந்த ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த சுற்றுலா நிலையத்திற்கு இதுவரை மின்சார இணைப்புக்கள் வழங்கப்படாத நிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள கட்டட தொகுதிக்கு பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பு தொகுதிகள் சேதமாகியுள்ளன.

அத்துடன் சுற்றுலா மையத்தொகுதியானது எதுவித பராமரிப்புக்களும் இல்லாது, எவரது பயன்பாட்டிற்கும் உட்படுத்தப்படாது பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது.

பெருந்தொகை நிதியில் கட்டப்பட்ட இவ்வாறான கட்டடம் எவ்வித பயன்பாடுமின்றி பாழடைந்த நிலையில் காணப்படுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Related posts

ஊழல் மோசடி இரண்டு அமைச்சர்கள் அச்சத்தில்

wpengine

ஜனவரி 12 முதல் போலீஸ் சுற்றிவளைப்பில் இதுவரை சிக்கிய 30,000 அதிகமானோர்கள்.

Maash

கோத்தா 2வது தலைவர்! தீர்மானம் எதும் இல்லை – உதய கம்மன்பில

wpengine