பிரதான செய்திகள்

பட்டதாரிகளுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு

எதிர்வரும் 2ஆம் திகதி முதல் 20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி முதல் மே மாதம் 5 ஆம் திகதி வரை 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்றன.

இதன் இறுதி பெறுபேறுகள் அமைச்சிற்கு கிடைத்துள்ளது. அதனடிப்படையில், 20 ஆயிரம் பேரை அரச சேவைகளில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வவுனியாவில் கடையொன்று தீயினால் முற்றாக சேதம்

wpengine

எவரையும் வீழ்த்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்கில்லை, முன்னாள் முஸ்லிம் எம் பிக்களுடனான சந்திப்பில் ரிஷாட்

wpengine

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து – ஆராய குழுவொன்று நியமனம்..!

Maash