சிவசேனா அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மறவன்புலவு சச்சிதானந்தன் வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
‘வடக்கு கிழக்கு மாகாணங்களில் 30 வருட கால யுத்தம் இடம்பெற்றது. அதன் பிற்பாடு இன்று வரை அங்கு வாழ்கின்ற மக்கள் ஏராளமான பிரச்சினைகளையும் – சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதுவரைக் காலம் அம்மக்களின் உரிமைகளுக்காகவோ – பிரச்சினைகளுக்காகவோ குரல் கொடுக்காத இந்துத்துவா அமைப்புக்கள் இன்று தமது இனத்தின் மீது பற்றுள்ளவர்களாக காட்ட முற்படுகின்றனர்.
இந்தியாவிலிருந்து இன்று நேற்று தரவிரக்கம் செய்யப்பட்ட சிவசேனா அமைப்பும் அதன் இலங்கை பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மறவன்புலவு சச்சிதானந்தன் என்பவரும் இவ்வளவு காலம் எங்கு போயிருந்தார்.
யுத்த வடுக்களுடன் தமது வாழ்க்கையை அமைதியாக ஆரம்பித்துள்ள தமிழ் மக்களின் மனங்களின் இனவாதத்தை விதைத்து மீண்டும் அவர்களை அதலபாதாலத்துக்குள் தள்ளுவதற்கே மறவன்புலவு சச்சிதானந்தன் முயற்சிக்கிறார்.
தமிழ் – முஸ்லிம் மக்களிடையே என்னதான் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அவர்கள் மொழியால் ஒன்றுபட்டவர்கள். ஆனால், வேறு சாராரை தமது சகாக்களாக காட்டிக்கொண்டு முன்வந்துள்ள சிவசேனா போன்ற அமைப்புக்களின் உள்திட்டம் என்ன? அவர்களது பின்னனி என்ன? போன்ற விடயங்கள் தொடர்பில் மக்களும், புலனாய்வுப் பிரிவும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மாட்டிறைச்சி கடைகளை தடை செய்ய வேண்டும் என கோருகின்ற இவர்கள் ஏன் மதுபானசாலைகள், ‘மஸாஜ் சென்டர்’ போர்வையில் நடத்தப்படுகின்ற விபச்சார விடுதிகளை தடை செய்யக்கோருவதில்லை. இந்த விடயங்களுக்கும் எந்த மதமும் அனுமதி அளித்தில்லை. இவ்வாறிருக்க மாட்டிறைச்சி மட்டும்தானா இவர்களது கண்களுக்கு தெரிகின்றது.
இந்த நாட்டில் மூவின மக்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட்டு வாழ்வதற்கான உரிமை அரசியல் யாப்பின் ஊடாகவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வந்த மறவன்புலவு சச்சிதானந்தனுக்கு முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ முடியாது என்று கூற என்ன அதிகாரம் இருக்கின்றது. – என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.