பிரதான செய்திகள்

யாழ் மின்சாரம் தாக்கி தந்தையும், மகனும் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் அவரின் 29 வயது மகனும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

வீட்டில் டிஷ் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரீவி இணைப்பில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் மின்சாரம் தாக்கியதிலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.

கேபிள் ரீவி வயருடன் மின் விநியோக இணைப்பும் தொடர்புபட்டிருந்தது என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நகரில் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் ஜெகனாந்தன் (வயது- 50), சஞ்சீவன் (வயது- 29) ஆகிய இருவருமே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் காவற்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் புதிய தீர்மானம்

wpengine

மன்னாரில் பல இடங்கள் பாதிப்பு முன்னால் மாகாண சபை உறுப்பினர் விஜயம்

wpengine

முன்னிலை சோசலிசக் கட்சி காலியில் சத்தியாக்கிரக போரட்டம்

wpengine