Breaking
Mon. Nov 25th, 2024

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்ம சாந்திக்காக சர்வமத பிரார்த்தனைகளும், அஞ்சலி உரைகளும் இடம் பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மன்னார் நகர சபையின் தலைவர், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் உறவுகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதே வேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூறும் வகையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள அதிகளவான வர்த்தக நிலையங்கள் காலை முதல் மதியம் வரை மூடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூர்ந்துள்ளனர்.

பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டதோடு, மக்களின் நடமாட்டமும் குறைவடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *