ஏ.எச்.எம்.பூமுதீன்
இஸ்ரேலின் காட்டுமிரான்டித்தனமான கொடூரத்திற்கு இலக்காகிக் கொண்டிருக்கும எமது பலஸ்தீன் நாட்டு உம்மத்துக்களுக்காக இப்புனித ரமழானில் இரு கரம் ஏந்தி பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்.
புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள இத்தருணத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட உலக வாழ் முஸ்லிம்கள் அனைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் உண்டாகவும் பிரார்த்திப்போம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை முஸ்லிம்களுக்கு மீண்டும் அண்மைக் காலங்களில் ஒருசில இனவாதிகளால் ஏட்படுத்தப்பட்ட துவேஷ மனப்பான்மை நீங்கவும்- மக்கள் மத்தியில் உள்ள பதட்ட நிலைமை அகலவும் இந்த மாதத்தில் நாம் கேட்கும் பிரார்த்தனைகளில் அதிகளவில் இணைத்துக் கொள்வோம்.
அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு,
புனித நோன்பு மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த வேளையில் இந்த 30 நாட்களையும் கண்ணியமிக்கதாகவும் சகோதர இனங்களுக்கு இடையில் பரபஸ்பர நம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையிலும் எமது செயற்பாடுகளையும் வணக்க வழிபாடுகளையும் பயன்படுத்திக்கொள்வோம்.
நோன்பு திறக்கும் வேளைகளை வசதி குறைந்த குடும்பங்களுடன் இணைந்து எமது நோன்பு திறக்கும் சந்தர்ப்பத்தை மிகவும் எளிமையான முறையில் அமைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பலஸ்தீன் முஸ்லிம்கள் மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் வேண்டுமென்றே மேற்கொண்ட கொடூர தாக்குதலில் சிறுவர்கள் , பெண்கள் உட்பட சுமார் 70 பேர் வரை
ஒரே நேரத்தில் – ஒரே இடத்தில் படு கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். பலர் படு காயமடைந்திருக்கின்றார்கள்.
எனினும், என்றுமில்லாதவாறு பல ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலின் இந்த மிலேச்சத்தனத்தை வண்மையாக கண்டித்திருப்பது , பலஸ்தீன் விவகாரத்தில் ஒரு மென்மைப்போக்கு ஏற்பட ஆரம்பித்துள்ளதை உணர்த்துகின்றது. இந்த நிலைமைக்கு அடித்தளமிட்டிருப்பது எம்மைப் போன்ற உம்மத்துக்களின் பிரார்த்தனைகளாகவே இருக்க முடியும்.
ஷைத்தான் விலங்கிடப்படும் இப் புனித மாதத்தில் நமது பிரார்த்தனைகள் அதிகளவில் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட சந்தர்ப்பம் உள்ளது. அதனால், இம் மாதத்தை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்போம்.
2014 ஆம் ஆண்டு நோன்பு எமது சமுகத்தை பொறுத்தவரையில் அச்சமும் இருளும் பயங்கரமும் நிறைந்ததாக இருந்ததை நாம் மறக்கமாட்டோம். அந்த நிலை கடந்த இரு வருட கால ரமழான் மாதங்களில் இல்லாமலாக்கப்பட்டுள்ளதை நாம் கண்ணூடாக கண்டோம். அந்த சுமுக நிலை இந்த வருட ரமழானிலும் எதிரொலிக்க துஆ செய்வோம்.
எனவே எம்மை அடைந்துள்ள இந்த ரமழான் மாதத்தை இறைவனுக்கு பொருத்தமான முறையில் பயன்படுத்தி இரவு நேர வழக்க வழிபாடுகளில் தம்மை அர்ப்பணித்து ஏழை எளியவர்களுக்கு தர்மங்களைச் செய்து இம்மாதத்தில் அதிக நன்மைகளை ஈட்டிக்கொள்வோம் என வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வாழ் முஸ்லிம் சகேதரர்களிடமும் அமைச்சர் ரிசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.