Breaking
Mon. Nov 25th, 2024
எம்.ரீ. ஹைதர் அலி

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நீர்வழங்கல் சபையினால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 54 கிலோமீட்டர் நீளமான குடிநீர்த் திட்டத்திற்காக கொங்றீட் வீதிகளில் குழாய்களை பதிப்பதற்காக குழிகள் வெட்டப்பட்டு பதிக்கப்பட்டு வருகின்றன.

வெட்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு நிறைவடைந்துள்ள வீதிகளுக்கு தற்காலிகமாக கிரவல்கள் இடப்பட்டு வருவதுடன், முற்றுமுழுதாக வேலைகள் நிறைவடைந்ததன் பின்னர் குழாய்கள் பதிப்பதற்காக வெட்டப்பட்ட இடங்களுக்கு கொங்றீட் இடுவதற்குமுரிய நடவடிக்கைகளும் இதற்கான நிதி ஒதுக்கீடுகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எமது பிரதேசங்களில் சுத்தமற்ற குடிநீரை பருகுவதால் சிறுவர்கள் உட்பட பலர் பல வகையான நோய்களுக்கு உள்ளாகுவதுடன் இதனால் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.

கல்குடாத் தொகுதிக்கு போத்தலில்தான் குடிநீர் கொண்டு வர வேண்டும் என்று கின்டல் பன்னிய அரசியல் வங்குரோத்துக்காரர்களே இன்று சமூகத்திற்கு அவசிய தேவைப்பாடாகவுள்ள நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்பாரிய குடிநீர்த் திட்டத்தினை தடுப்பதற்கும், விமர்சிப்பதற்கும் முனைகின்றனர்.

மக்கள் மத்தியில் போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு, இத்திட்டத்தின்போது வெட்டப்பட்ட வீதிகளை நாங்கள்தான் செப்பனிட்டு சரி செய்தோம் என்று அரசியல் மேடைகளில் பேசுவதற்கும் மக்கள் மத்தியில் காண்பிப்பதற்கும் இன்று சிலர் வெறும் சுற்றுமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், குடிநீர்த் திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஏனையவர்களையும் சந்தித்து இவ்விடயங்களை நன்றாக கேட்டறிந்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டியவர்களே இன்று அரசியலுக்காக வெறுமெனே அவர்களின் இஸ்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, இக்குடி நீர்த் திட்டமானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ. கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் என்னுடைய முயற்சியினால் கல்குடாத்தொகுதி முழுவதும் கொண்டுவரப்பட்டது என்பது பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

தற்போது பதிக்கப்படும் குழாய்களை சுத்தம் செய்வதற்காக நீரை விட்டு கழுவும் பணிகள் மற்றும் நீர் அமுக்க பரிசோதனை போன்ற வேலைகளும் செய்யப்பட வேண்டியுள்ளது.

அத்துடன், குழாய்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதும் அவசரமாக குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும்.

குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டு தேவையுடைய அனைவரும் தங்களுக்கான குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் குழாய்கள் பதிப்பதற்காக வீதிகளில் வெட்டப்பட்ட இடங்கள் முற்று முழுதாக கொங்ரீட் இட்டு பழமைபோன்று செப்பனிப்படும்.

அதுமாத்திரமல்லாமல் தற்போது

வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வெட்டப்படும் இடங்களை அவசரமாக கொங்ரீட் இட்டு மூடுவதனால் மீண்டும் பாதிக்கப்படுவது பொதுமக்களே.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் நிலையில் மீண்டும் கொங்றீட் இடப்பட்டால் பின்னர் தங்களுக்குத் தேவையான குடிநீரினை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும்போது கொங்ரீட் வெட்டப்பட்டு மீண்டும் செப்பனிடும் தொகையினையும் சேர்த்து மேலதிகமாக செலவு செய்ய வேண்டி ஏற்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *