பிரதான செய்திகள்

யானை, மனித மோதல் மிகவும் உக்கிரமடைந்த நிலையில் பொன்சேகா

காட்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வன ஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். 

பொலன்னறுவை பிரதேசத்தில் மக்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

பொலன்னறுவை, தியபெதும பி​ரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானையில் தாக்குதலில் உயிரிழந்த நபரின் வீட்டுக்கு வன ஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா மற்றும் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும ஆகியோர் நேற்று விஜயம் செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் உறவினர்களை சந்தித்த பின்னர் பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

யானை, மனித மோதல் மிகவும் உக்கிரமடைந்த நிலையில் இருப்பதாகவும், இதற்கு மக்களுடன் இருந்து தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

Related posts

அரச ஊழியர்களின் சம்பளம் 107 வீதத்தினால் உயரும்

wpengine

வவுனியாவில் ஆக்கிரமித்த காணிகளை பெற்றுக்கொண்ட கமநல திணைக்களம்

wpengine

எருக்கலம்பிட்டி, முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பவள விழா

wpengine