பிரதான செய்திகள்

முஸ்லிம் உரிமையாளரின் தனியார் ஆடை நிறுவனம் தீ

இரத்மலானை – பொருபன வீதியில் அமைந்துள்ள தனியார் ஆடை நிறுவன களஞ்சியசாலையில் இன்று தீ பரவியது.

களஞ்சியசாலையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பரவிய தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், தீயை அணைப்பதற்கு 2 மணித்தியாலங்கள் சென்றுள்ளன.

தீயை அணைப்பதற்கு தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் இரத்மலானை விமானப்படையினரின் தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டன.

தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இப்போதும் தேர்தலை நடத்தலாம். அதில் எந்தச் சிக்கலும்இல்லை”

wpengine

முல்லைத்தீவில் 5பேர் கைது அனைவரும் இந்தியா

wpengine

வறட்சி நிவாரணம்! மக்களை வேலை வாங்கும் கிராம அதிகாரிகள்

wpengine