(அபூ செய்னப்)
இந்த மாவட்டத்தில் ஏழ்மையை இல்லாதொழிக்க வேண்டும்.அதற்காக முனைப்புடன் செயற்படுகிறேன் என்னிடம் இன,மத,சாதி வேறுபாடுகள் கிடையாது. வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும்,அவர்களின் பிள்ளைகள் கற்க வேண்டும்,உயர் பதவிகளில் அந்தப்பிள்ளைகள் அமர வேண்டும். என்பதுவே எனது அவா என கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் தெரிவித்தார்கள்.
மட்டு மாவட்ட மில்கோ நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற பாற்பண்ணையாளர்களுடனான விஷேட கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு செல்வநாயகம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கூறுகையில்
இந்த மாவட்டத்தில் சில அரசியல் வாதிகள் அறிக்கை விடுவதிலயே ஆர்வம் காட்டுகின்றனர், அபிவிருத்தி பற்றி எந்த கரிசனையும் எடுப்பதில்லை, வெட்டிப்பேச்சுக்களால் காலம் கடத்துகிற ஒரு அரசியல்வாதி நானில்லை. இந்த மாவட்டத்தில் பால் உற்பத்தியினை அதிகரிப்பதோடு பாலினை மூலப்பொருளாக கொண்டு உற்பத்தி செய்கின்ற நுகர்வுப்பொருட்களை அதிகமாக பொதுமக்கள் பாவிக்கும் நிலையினை உருவாக்க வேண்டும். இது தொடர்பில் எமது அமைச்சு பூரண ஆதரவையும்,அஅணுசரணையையும் தர தயாராக உள்ளது.
இந்த நல்லாட்சியில் இனவாதம் பேசுகின்றவர்களை,அல்லது அதற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை நாம் கண்டு கொள்ளத்தேவையில்லை. கல்விக்காக,தொழிலுக்காக,பிரதே
இந்த மாவட்டத்தில் உள்ள பாற்பண்ணையாளர்கள் எதிர்வரும் காலங்களில் சகல வளங்களையும் பெற்று தமது தொழிலை திறம்பட செய்வதற்கு ஆவன செய்யவுள்ளோம்.எனவே நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள்.இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி அடைந்த ஒரு வருமானத்தை பெறக்கூடிய ஒரு துறையாக, இந்த பால் உற்பத்தி துறை இருக்கும்,இந்த வருமானத்தைக் கொண்டு உங்கள் பிள்ளைகளை சிறந்த கல்வியுடையவர்களாக நீங்கள் மாற்ற வேண்டும்.
அதுவே நீங்கள் அவர்களுக்கு கொடுக்கின்ற உயர்ந்த சொத்தாகும் என அவர் கூறினார்.