பிரதான செய்திகள்

மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்டனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிலாவத்துறை முஸ்லிம் மக்களின் காணி விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்டனியின் இனவாத செயற்பாட்டை வண்மையாக கண்டிப்பதாக லங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  முசலி பிரதேச சபை உறுப்பினர் துல்பிக்கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றிய பின்பு சொந்த மண்ணில் மக்கள் மீள்குடியேறுகின்ற வேளையில் மீண்டும் அவர்களை அகதியாக புத்தளம் போன்ற மாவட்டங்களுக்கு திருப்பி அனுப்பு நோக்குடன் இனவாத கருத்துகளையும்,மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கூட்டமைப்பின் செல்ல பிள்ளையாக இருந்து செயற்ப்படும் மன்னார் நகர சபையின் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனியின் செயற்பாட்டு முழுமையாக கண்டிப்பதாவும்,முசலி பிரதேசத்திற்கு வருகைதந்து இனவாத அரசியலை மேற்கொள்ள கூடாது எனவும் தெரிவித்தார்.

இது போன்ற இனவாத செயற்பாடுகளையும், அச்சுறுத்தும் செயற்பாட்டை மன்னார் நகர சபை எல்லைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும்,இது போன்ற நடவடிக்கையினால் மீண்டும் தமிழ்,முஸ்லிம் மக்களின் இன நல்லூறவுக்கு பாதிப்பாக அமையும் என தெரிவித்தார்.

Related posts

பிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்

wpengine

மடு,தேவன் பிட்டி பாடசாலையினை திறந்து வைத்த கல்வி அமைச்சர்

wpengine

பலஸ்தீன உரிமைக்காக ஆதரவளிப்போம்

wpengine