பிரதான செய்திகள்

பணிப்பாளார் நாயகத்தை பதவி விலக்கிய பைசர் முஸ்தபா

இலங்கையின் விளையாட்டுத்துறை திணைக்கள சேவைகள் பணிப்பாளார் நாயகம் உடனடியாக பதவி விலக்கப்பட்டுள்ளதாக மாகாணசபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது
அமைச்சார் பைசர் முஸ்தபா விடுத்த உத்தரவுக்கு அமைய எச்.எம்.பி.பி ஹேரத் பதவி விலக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த பதவி விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்னாசிய இளையோர் தடகள செம்பியன்சிப் போட்டிகள் இன்று சுகததாஸ மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் அதில் பங்கேற்கும் இலங்கை வீரர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் செய்துக் கொடுக்கப்படாமையே இந்த பதவிவிலக்கலுக்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

இரனைமடுகுளம் நான்கு அல்லது ஐந்து தடவகளுக்கு மேல் வான்பாய்ந்துள்ளது .

Maash

மக்களின் நலன் குறித்து இதுவரை காலமும் எவ்வித அரசியல் திருத்தங்களையும் மேற்கொண்டு அரசு

wpengine

ஜனநாயக ரீதியில் போராடுகின்ற மக்களை அடக்க ஒடுக்க இச்சட்டம்

wpengine