முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இலங்கை சட்டப் பீட மாணவர்கள் அவமதித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மஹிந்தவை அவமதிக்கும் வகையில் நடத்தப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
சட்ட பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு விளையாட்டில் யானைக்கு கண் வைத்தல் உட்பட பல்வேறு விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
எனினும் இந்த மாணவர்களினால் யானைக்கு கண் வைக்கும் போட்டி வித்தியாசமான முறையில் செய்யப்பட்டுள்ளது.
யானைக்கு கண் வைப்பதற்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவத்தை வரைந்து மஹிந்தவுக்கு கண் வைப்பது போன்று இந்த விளையாட்டு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.
எனினும் புகைப்படத்தை பார்த்தவர்கள் யாரும் அதற்கு சிறப்பான கருத்துக்களை வெளியிடவில்லை எனவும், அதிகம் விமர்சிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.