பிரதான செய்திகள்

கோழி இறைச்சி தயாரிப்பு : நவீன கோழி குஞ்சுபொறிப்பகத்துடன் டெல்மோ மெருகேற்றம்

இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு மற்றும் பதப்படுத்தல் நிறுவனமான டெல்மோ சிக்கன் அன்ட் அக்ரோ (பிரைவட்) லிமிடெட் டெல்மோ வர்த்தக நாமத்தின் கீழ் தனது தயாரிப்புகளை நாடு முழுவதிலும் விநியோகித்து வருகிறது. 

 

தனது உற்பத்தி கொள்ளளவில் பெருமளவு மெருகேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் நவீன வசதிகள் படைத்த குஞ்சுபொறிக்கும் நிலையத்தை நிறுவனம் அண்மையில் திறந்திருந்தது. உலகின் முன்னணி குஞ்சுபொறிக்கும் சாதனங்களான பெல்ஜியம் நாட்டின் Petersime BV இயந்திரத்தை தன்வசம் கொண்டுள்ளது. இதனூடாக ஒரு மாதத்தில் சுமார் 500000 ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளை பொறிக்கக்கூடிய திறனை கொண்டுள்ளது. குருநாகலில் குபுக்கெட பகுதியில் இந்த குஞ்சு பொறிப்பகம் அமைந்துள்ளது.

1988 இல் எல் ஏ சுமித் பெரேரா என்பவரால் நிறுவப்பட்ட டெல்மோ, படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று புகழ்பெற்ற நாமமாக திகழ்கிறது. அண்மையில் மேற்கொண்டிருந்த மெருகேற்ற விஸ்தரிப்பு நடவடிக்கையினூடாக, தற்போது நாட்டில் காணப்படும் மாபெரும் கோழி மற்றும் விவசாய நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

டெல்மோ சிக்கன் அன்ட் அக்ரோ பிரைவட் லிமிடெட் தலைமை அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான சுமித் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,

“தெற்காசிய பிராந்தியத்தில் புகழ்பெற்ற நவீன கோழிக்குஞ்சு பொறிக்கும் துறையை கொண்ட நாடாக இலங்கை திகழ்கிறது. புதிய குஞ்சுபொறிப்பகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமையானது, டெல்மோ குடும்பத்தை பொறுத்தமட்டில் பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது. நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளதனூடாக இந்த துறையில் காண்பிக்கும் தொடர்ச்சியான பங்களிப்பு உறுதி செய்துள்ளது.” என்றார்.

அதன் பொயிலர் உற்பத்தி பண்ணைகள் பதப்படுத்தல் பகுதிகள் மற்றும் சாதனங்கள் போன்றன நவீன தொழில்நுட்பங்களுக்கமைய காணப்படுகின்றன. இவை சர்வதேச தரங்களுக்கமைய காணப்படுகின்றன. நிறுவனம் பெற்றுள்ள சான்றளிப்பு மற்றும் தரப்படுத்தல்களான GMP, HACCP, ISO 22000 போன்றவற்றினூடாக இவை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஹலால் சான்றையும் பெற்றுள்ளன.

டெல்மோ உயர் தயாரிப்பு தரம் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் தன்னிறைவுக்காக சந்தையில் புகழ்பெற்றுள்ளது. சகாயத்தன்மை மற்றும் உயர் புரதம் காரணமாக கோழி இறைச்சிக்கு சந்தையில் அதிகளவு கேள்வி காணப்படுகிறது.

அறிமுகம் செய்யப்பட்டது முதல் இது வரையில் டெல்மோ புத்தாக்கமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக தனது விநியோகத்தொடரை மேம்படுத்தி வந்துள்ளது. நாட்டின் நன்மதிப்பைப் பெற்ற கோழி இறைச்சி விநியோகத்தராக திகழ்கிறது. கம்பஹா மாவட்டத்தின் உடுகம்பொல பகுதியில் தனது செயற்பாடுகளை கொண்டுள்ளது.

பிராந்தியத்தில் புரொயிலர் கோழி உற்பத்திரூபவ் பதப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தலில் முன்னோடியாக திகழ்கிறது.

Related posts

அம்பாறை முஸ்லிம் அரசியல்வாதிகளே! இறக்காமம் மீது இரக்கம் காட்டுங்கள்.

wpengine

இன்று மன்னாரில் விசாரணை! முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு போதிய தகவல் இல்லை

wpengine

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் மன்னாரில் மூவர் கைது

wpengine