உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீர் பெண்களுக்கு பயிற்சி கொடுக்கும் நாமல்

காஷ்மீர் மகளிர் ரக்பி அணிக்கு பயிற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் ஈடுபட்டுள்ளனர்.

ஐம்மு காஷ்மீர் ரகர் விளையாட்டு அணியின் அழைப்பின் பேரில் மஹிந்தவின் புதல்வர்கள் இந்தியா சென்றுள்ளனர்.

அவர்கள் ஜம்மு காஷ்மீர் ரகர் விளையாட்டு பெண்கள் அணியை சேர்ந்த 60 போட்டியாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்த பயிற்சிக்காக ஆறு பயிற்சியாளர்கள் இணைந்துள்ளனர்.

வீராங்கனைகளுக்கான பயிற்சி நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சி நடவடிக்கைகளில் நாமலின் சகோதரர் ரோஹித ராஜபக்சவும் இணைந்துள்ளார்.

பயிற்சியின் இடையில் காஷ்மீர் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபுக்களுடன் நாமல் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

Related posts

Auto Diesel இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ளது-அமைச்சர் கஞ்சன விஜேசேகர

wpengine

வடக்கில் தேசிய கொடியை இறக்கிவிட்டு, கறுப்புக்கொடி என்பது தெற்கு மக்களின் உணர்வை தூண்டுவதாகும்.

Maash

பர்தாவை நீக்க கோரிய McDonalds! போராடிய இஸ்லாமிய பெண்

wpengine