பிரதான செய்திகள்

மாவட்ட செயலக உத்தியோகத்தர் வேலை நேரத்தில் தூக்கம்

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ கிளையில் பணி புரியும் அரச அதிகாரி ஒருவர் தனது பணி நேரத்தில் குறட்டை விட்டு தூங்கிய சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

மாவட்டச் செயலகத்தில் பட்டதாரி பயிலுனர் நியமனங்களுக்கான நேர்முக தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த தேர்வுகள் இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ கிளையில் பணி புரியும் குறித்த அதிகாரி இவ்வாறு பணி நேரத்தில் உறங்கியுள்ளமை நேர்முகத் தேர்வுக்கு சென்றவர்களிடையே விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.

மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய அரச அதிகாரிகள் இவ்வாறு கவனயீனமாக நடந்துகொள்வதும், இவர்களின் அநாகரிகமானதும், சோம்பேறித்தனமானதுமான இந்த செயற்பாடுகளும் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவதுடன், கோபத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உயிர்த்த தாக்குலுக்கு சர்வதேச முஸ்லீம் அமைப்பு வழங்கிய நிதி கிடைக்கவில்லை

wpengine

சிறிசேனவிற்கு எதிராக அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்ட வட மாகாண ஆளுநர்

wpengine

20வது நிறைவேற்றம்! அமைச்சர் ஹக்கீம்,றிஷாட்,ஆசாத் கோரிக்கையினை நிறைவேற்றிய மைத்திரி

wpengine