கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் வழக்கு நடவடிக்கையில் ஆஜராவதற்கு அரசாங்கத்துடன் இருந்து விட்டு இராஜினாமா செய்த 16 பேரில் நால்வர் நேற்று இணைந்துள்ளனர்.
இதனிடையே,நேற்றுமுன் தினம் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அண்மையில் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த சட்டத்தரணிகளான தயாசிறி ஜயசேகர, டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி, அனுராத ஜயரத்ன ஆகியோர் கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தனர்.
பிணை நிபந்தனைகளை முழுமைப்படுத்த முடியாமல் போனமையினால், நாடாளுமன்ற உறுப்பினர்
மஹிந்தானந்தவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஆறு பேர் அண்மையில் தமது பதவியினை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.