1.புலிகளின் பலவந்த வெளியேற்றத்திற்கு பின் முழுமையான அடர்ந்த பெரும் காடுகளாக இருந்த முசலி மண் சுமார் 18000 ஏக்கர் காணிகள் காடழிக்கப்பட்டன.
2. விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக அகத்தி,வியாடிக்குளம் ஆகிய இரண்டு தேக்கங்களும் இன்னும் பல சிறிய குளங்களும் புனரமைப்புச் செய்யப்பட்டன.
3. முருங்கனில் இருந்து முள்ளிக்குளம் வரைக்கும், சிலாவத்துறையில் இருந்து நானாட்டான் வரைக்கும் காபட் வீதிகள் போடப்பட்டன.
4. முசலிப்பிரதேசம் முழுவதும் மின்சாரம் வழங்கப்பட்டன.
5. முசலிப்பிரதேசத்திற்கு ஒரு தேசிய பாடசாலை ஐந்து மகா வித்தியாலயங்கள் 19 கனிஷ்ட பாடசாலைகள் பல முன் பள்ளிகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டும் புனரமைக்கப்பட்டும் வழங்கியுள்ளார்கள்.
6. ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 108 ஆசிரியர்களையும் சில முன் பள்ளி ஆசிரியர்களையும் நியமித்தார்கள்.
7. 32 பேரை சமூர்த்தி உத்தியோகத்தர்களை நியமனம் வழங்கினார்கள்.
8. 27 பேரை சிற்றூழியர்களாக பதவி வழங்கினார்கள்.
9.மீள் குடியேற்றம் செய்யப்பட்ட 8126 குடும்பங்களில் 3988 பேருக்கு வீடுகளை வழங்கினார்கள்.
10. சில பள்ளிவாசல்களை நிர்மாணித்தும் புனரமைத்தும் இறை வணக்கத்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
11. பத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு கடைகளை புனர் நிர்மானம் செய்தார்கள்.
12.சிலாவத்துறை வைத்தியசாலையை புனரமைப்புச் செய்து புதிய கட்டடங்களை வழங்கி சில மருந்துச் சாலையையும் வழங்கினார்கள்.
13. சிலாவத்துறையில் மீனவத்துறைமுகம் ஒன்றை உருவாக்குவற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
14. ஐந்துக்கு மேற்பட்ட விவசாய உத்தியோகத்தர்களையும் சில கூட்டுறவு பரிசோதகர்களையும் வழங்கியுள்ளார்கள்.
15. இந்த வருடம் நடை பெறவுள்ள தேசிய மீலாத் விழாவை கொண்டாட வேண்டும் என்ற தலைப்பில் முசலிப் பிரதேசத்தை முழுமையாக அபிவிருத்தி செய்யும் நோக்கோடு அனுமதியைப் பெற்றிருக்கிறார்கள்.
இத்தனை பணிகளையும் இன்னும் பல பணிகளையும் எனதும் எமது மக்களின் வேண்டு கோளுக்கிணங்கவும் கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் செய்து முடித்துள்ளார்கள்.
ஏனைய எந்தவொரு அரசியல் கட்சியும் இவ்வாறான பணிகளை செய்துள்ளார்களா என்பதை கேட்டு உங்களினுடைய சிந்தனைக்கு விட்டு விடை பெறுகிறேன்.
இத்தனை பணிகளையும் எமது பிரதேசத்திற்கு செய்த கௌரவ அமைச்சருக்கு என்றும் நன்றியுடையவர்களாக இருப்போமாக.