Breaking
Sun. Nov 24th, 2024

( இப்பதிவு பிழையான சிந்தனையைத் தருமேயானால் அது உங்களின் புரிதலில் உள்ள கோளாறே அன்றி வேறெதுவுமில்லை)

முசலியிலே ஆட்சியை பிடிப்பதிலே இரு முஸ்லிம் கட்சிகளிடையே இருந்த போட்டி நிலை யாவரும் அறிந்ததே. அதேவேளை எமது ACMC கட்சியினுள்ளே தவிசாளர் பதவியினைப் பெற்றுக்கொள்வதற்கு உறுப்பினர்களிடையே இருந்த போட்டி, தலைமையினால் தனியாக முடிவு எடுக்க முடியாமல் உக்கிரமமடைந்ததுடன்கட்சியின் மற்றொரு அமைச்சரான அமீர்அலியை மன்னாருக்கு வரவழைத்து பேசுமளவுக்கு நிலமை மோசமாக இருந்ததை சாதாரண கட்சிப்போராளிகள் அறிந்திருக்க நியாயமில்லை.

இந்த இடத்திலேதான் சகோதரர் ரயிஸ் அவர்களே உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஆரம்பத்திலே நீங்கள்தான் தவிசாளர் என்று உங்களைச் சார்ந்தவர்கள் மூலமாக சமூக வலைத்தளங்களிலே பரவ விடப்பட்டன. பின் நான் பதவிகளுக்காக அமைச்சருக்கு நெருக்கடி கொடுக்கப்போவதில்லை என்ற செய்தி உங்களால் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அமைச்சர் தமக்கு தருவதாக வாக்களித்துள்ளார் என்று உங்கள் நட்பு வட்டாரத்திலே கூறியிருந்தீர்கள்.

இவ்வாறு பல்வேறுபட்ட செய்திகள் எமக்கு அறியக்கிடைத்த வண்ணமிருந்தன . ஆனால் நீங்கள் சென்ற வியாழக்கிழமை மன்னார் ஆஹாஸ் ஹோட்டலிலே செய்தியாளர் மாநாட்டிற்கு முன்னதாக எம்மோடு நடந்துகொண்ட முறை நீர் ஏட்டுக்கல்வியை மாத்திரம் படித்தவர், பண்பை மறந்தவர் அத்துடன் அரசியல் முதிர்ச்சி அற்றவர் என்பதை புடம் போட்டுக்காட்டிவிட்டது.

மேலும் உம்மைப் போன்று நாமும் நடந்திருந்தால் அன்று உமது நிலையை சற்று யோசித்துப் பாரும்.
நீர் உமது சுட்டுவிரலை எம்முன்னே நீட்டுவதற்கு முன் நாம் யார் ? இக்கட்சியினுள்ளே எவ்வாறு வந்தோம் ? எமது பின்புலம் என்ன என்று நீர் யோசித்திருக்க வேண்டும். உமது இந்த வெற்றி நீர் தனியாக பெற்றுக்கொண்ட வெற்றியல்ல எமது இரத்த உறவகளின் உழைப்புக்களும் அதில் அடங்கியுள்ளன என்பதை மறந்து விடாதீர்.

இப்போது விடயத்திற்கு வருகின்றேன்.
ஏன் உங்களுக்கு தவிசாளர் பதவி உங்களுக்கு தரப்படவேண்டும் ? பட்டம் பெற்றவரென்றால் பதவிகள் தரப்படவேண்டுமா ? அல்லது பட்டம் பெற்றவர் மாத்திரமா படித்தவர். இந்த நாட்டை ஆளும் ஜனாதிபதி எவ்வளவு படித்தவர், தவிசாளர் பதவியினைப் பெறுவதற்கான படிப்பின் அளவுகோல் என்ன? இவ்வாறு கேள்விகள் எம்மால் கேட்கமுடியும்.

பெற்றுக்கொண்ட வாக்கு விகிதத்தின் அடிப்படையில் தவிசாளர் பதவி தரப்படவேண்டுமெனில் அது சகோ இக்பாலுக்கு அல்லது தம்பி றஸ்மினுக்கு கொடுக்கப்பட்டிருக்கவோண்டும். அது போன்று அரசியல் தகமையின் அடிப்படையிலே முன்நாள் பிரதித்தலைவர் சகோ பைறூஸுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அது போன்று கல்வி தரத்தின் அடிப்படையை மாத்திரம் வைத்துப்பார்த்தால் உங்களுக்கு தரப்பட்டிருக்கலாம். ஆனால் இங்கே பார்க்கப்பட்டது கல்வி, வாக்குப்பலம் , அரசியல் அனுபவம், மக்கள் ஜனரஞ்சகம், கட்சியினுள்ளே பெற்றுக்கொண்ட நல்லிடம் போன்றனவையாகும். அந்த வகையிலேயே இப்பதவி சகோதரர் சுபியான் அவர்களுக்கு சென்றடைந்துள்ளது. மேலும் தான் நாடியோருக்கே அல்லாஹ் ஆட்சி அதிகாரங்களை வழங்குகின்றான்.

எனவே உங்களுக்கு மாத்திரம்தான் எழுதமுடியும் என்று போலி குற்றச்சாட்டுக்களை மற்றவர் மேல் சுமத்துவதை விடுத்து முசலியின் உப தவிசாளராக சிறந்த முறையில் நடக்க முயற்சி செய்யுங்கள். ‘வாழ்த்துக்கள் ‘
புரிதலுக்கு நன்றி

ஜெஸீல்
முன்நாள் எதிர்க்கட்சி தலைவர், முசலி

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *