பிரதான செய்திகள்

அரசாங்கத்தை களைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்ல வேண்டும் மஹிந்த

நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை நோக்கி அரசாங்கத்தை நகர்த்துவதே இந்த புதுவருடத்தில் உள்ள ஒரே திட்டம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கால்ட்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற புதுவருட கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“இந்த வருடம் எமக்கு மிகவும் ஒரு நல்ல வருடமாக அமைவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

அரசாங்கத்தின் பிளவு, ஐக்கிய தேசிய கட்சியின் பிளவு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பயணத்துக்கான ஆரம்ப அத்திவாரம் உருவாகியுள்ளமை போன்றவை தற்பொழுது நிகழ்ந்துள்ளன.
இந்த வருடம் தேர்தல்கள் உள்ள ஒரு வருடம். உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றது. மாகாண சபை தேர்தல் நடக்கவுள்ளது. அதுவும் பிற்போடப்படுமோ தெரியாது.

அதேவேளை நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது,
எனினும், அரசாங்கத்திற்கு பலம் இருக்குமென்றால், அரசாங்கம் மக்களுக்கு முகம் கொடுக்க பயம் இல்லையென்றால், உடனடியாக இந்த அரசாங்கத்தைக் களைத்து, நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்ல வேண்டும்.

இதுவே, எங்கள் அனைவரதும் புதுவருட எதிர்பார்ப்பாகக் இருக்கின்றது. இதனை நோக்கி அரசாங்கத்தை நகர்த்துவதே இந்த புது வருடத்தின் ஒரே திட்டம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கபாலி தோல்வி படம் : வைரமுத்து பேச்சால் பரபரப்பு

wpengine

அவதானம் . ! ஈ8 விசா பிரிவின் கீழ் தொழில்…

Maash

மணப்பெண்ணாக மணமேடையில் பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

wpengine