தமது சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களை கடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க ஜனாதிபதி அனுமதித்தமையானது, அவரின் அசாதாரணமான ஜனநாயக பயிற்சியாகும் என இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
அந்த செய்தியில் மேலும்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா யோசனைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுடன் ஒன்றாக செயற்பட முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு முன்னதாக தீர்மானம் எடுத்திருந்தது.
இந்த தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார். இந்த கடிதத்திற்கு பதிலாக தமது அமைச்சர்களை அமைச்சரவையில் கலந்து கொள்ளாமல் செய்தமை பழிக்கு பழி என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு போதுமான செயலாக அமைந்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்துக்கு புதிய குத்தகை வாழ்க்கை நீடிப்பு கிடைத்துள்ளது. எனினும் கண்ணிவெடிகளை அது கடந்து செல்ல வேண்டியுள்ளது. எரிபொருள் விலைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டியுள்ளமையும் இதில் ஒரு கண்ணிவெடியாகும்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாவது மத்தியக்குழு கூட்டத்தை புத்திசாலித்தனமாக தவிர்த்துள்ளார்.
இது அந்த கட்சியின் உறுப்பினர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் இயங்குவதா? அல்லது விலவதா? என்ற தீர்மானத்தை பிற்போடுவதற்கு உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மறுபுறத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலமான நிலையை அடைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.