பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதில் முன்னின்று செயற்பட்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசிக்கு பெறுமதி மிக்க பரிசு ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அமைச்சர் பௌசியின் பயன்பாட்டிற்கென 430 இலட்சம் பெறுமதியான சொகுசு வாகனமொன்று அமைச்சரவை அனுமதியுடன் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசுகையில்,
“பல்வேறு வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்ட சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இவ்வாறு எடுக்கப்படும் உறுதியற்ற தீர்மானங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.