Breaking
Thu. Nov 14th, 2024

தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்த ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சுமார் ஐந்து கோடி ரூபா பணம் வழங்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ரணிலிடம் பணம் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது குறித்து அம்பலப்படுத்தியதாக, தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த உறுப்பினருக்கு இருந்த கடன் தொல்லை காரணமாகவே அந்தப் பணத்தினை பெற்றுக்கொள்ள நேர்ந்ததாக அவர் தன்னிடம் கூறியுள்ளதாகவும் தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கொடுக்கல் வாங்கல் விடயத்தில் மத்திய வங்கி ஊழலில் தொடர்புபட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும், அவற்றினை கூடிய விரைவில் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவதாகவும் தயாசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் போது அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *