பிரதான செய்திகள்

தந்தையினை காணவில்லை மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

விடத்தல் தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட  8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) வயது-71 என்பவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்திலுள்ள தனது வீட்டில் இருந்து கடந்த 26 ஆம் திகதி மதியம் வெளியே சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை.  அவரை தேடியும் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவர் காணாமல்போயுள்ளமை தொடர்பில் கடந்த சனிக்கிழமை (31) மன்னார் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 077-3284387,071-6103546 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈரானுடன் அனு ஒப்பந்தம்! இல்லையென்றால் பொருளாதார தடை டொனால்ட்

wpengine

“வறுமையில் வாடுவோருக்கு“ சமுர்த்தி கொடுப்பனவு கொடுக்க வேண்டும்.

wpengine

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனுதாபம் தெரிவித்துள்ளார்.

Maash