பெய்ஜிங்கிலிருந்து ஏ.பி.மதன் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பாரியளவான கடன் தொகையின் சில பகுதியை முதலீடாக மாற்றுமாறு சீன அரசாங்கத்திடம் கோரியுள்ளோம் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
‘இலங்கை அரசாங்கத்துக்கு சீன அரசாங்கம் பாரியளவான கடன் தொகையினை வழங்கியுள்ளது. அவற்றினைக் கடனாகக் கருதி, திருப்பிச் செலுத்த வேண்டுமானால் பாரிய நட்டம் ஏற்படும். ஆகையினால் அக்கடன் தொகையின் சில பகுதியை இலங்கைக்கான முதலீடாக மாற்றுமாறு சீன பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் கோரியுள்ளோம்.
எமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எனவே, இதுதொடர்பிலுள்ள சட்டச் சிக்கல்கள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு, மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறது’ என, அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.